OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!

Author: Selvan
2 January 2025, 9:55 pm

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவான பிதாமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Actor Kanja Karuppu success story

இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் கஞ்சா கருப்பு இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அடியெடுத்து வைத்தார்,அதன்பின்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.அதில் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு தேடி அலைந்த போது இயக்குனர் பாலா அண்ணாவின் அலுவலகத்தில் ஆபீஸ் பையனாக வேலை பார்த்தேன்.

இதையும் படியுங்க: ராம் சரண் இத்தன கெட்டப்பா…பிரம்மாண்டமாக வெளிவந்த கேம் சேஞ்சர் ட்ரைலர்..!

பாலா அண்ணா என்னை அங்கேயே தங்க வைத்து,நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அப்போது அவர் என்னிடம் வந்து நீ பெரிய நடிகனாக வந்த பிறகு என்னை பற்றி பேசு,அதுவரை நான் செய்ததை நீ வெளியே சொல்ல கூடாது என அன்பு கட்டளை விடுத்தார் என அந்த பேட்டியில் கஞ்சா கருப்பு தெரிவித்திருப்பார்.

மேலும் அவர் இயக்குனர் பாலா அண்ணா மற்றும் அமீர் அண்ணா முன்னாடி நான் எப்போதும் அமர்ந்து பேச மாட்டேன்,அவர்கள் இருவரும் என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள்,அவர்களுக்கு நான் எப்போதும் கடமை பட்டுள்ளேன் என கூறியிருப்பார்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 89

    0

    0

    Leave a Reply