திமுக முக்கிய புள்ளிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.. காரணம் இதுவா?

Author: Hariharasudhan
3 January 2025, 10:00 am

அமைச்சர் துரைமுருகன், திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோரது வேலூர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூர்: வேலுார் மாவட்டம், பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர். அதேபோல், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது, கதிர் ஆனந்துக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கதிர் ஆனந்த் வாக்காளர்களுக்கு 11 கோடி ரூபாய் கொடுப்பதற்காக, இவர் வீட்டில் பணம் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

Ed raid in Duraimurugan kathir anand house

பின்னர், இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கில், இன்று (ஜன.03) வேலுார், பள்ளிக்குப்பம் நடு மோட்டூர் பகுதியில் உள்ள திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; தீவிர மீட்புப் பணி.. பள்ளிகளுக்கு விடுமுறை!

மூன்று கார்களில், 6 அதிகாரிகள் பலத்த பாதுகாப்பு உடன் சோதனை நடத்தினர். மேலும், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில், மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 92

    0

    0

    Leave a Reply