பேசிக் கொண்டிருந்த காதலனை விரட்டிவிட்டு காதலி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Author: Hariharasudhan
3 January 2025, 12:45 pm

ராமநாதபுரத்தில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலி, நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தற்போது புத்தாண்டை முன்னிட்டு தனது காதலனுடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், புத்தியேந்தல் என்ற பகுதியில் காதலர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து உள்ளனர். அப்போது, திடீரென அங்கு 4 பேர் வந்துள்ளனர்.

தொடர்ந்து அவர்கள், இங்கு என்ன செய்கிறீர்கள்? எனக் கேட்டு, காதலர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அவர்களை தாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, காதலனை அங்கிருந்து அவர்கள் விரட்டி உள்ளனர். பின்னர், இளம்பெண்ணை அங்கு இருந்த மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று, நான்கு பேரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Four arrested in sexual assault

இதனையடுத்து, அங்கிருந்து 4 பேரும் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும், இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை உடன் விஜய்.. ஐகோர்ட் அனுமதி.. நடந்தது என்ன?

இதன் பேரில், புவனேஷ் குமார் (27), குட்டி (25), செல்வகுமார் (27) மற்றும் சரண் முருகன் (29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் ஜனவரி 10ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 106

    0

    0

    Leave a Reply