கணவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துச் சென்று கொலை.. மனைவிக்கு வலைவீச்சு!

Author: Hariharasudhan
3 January 2025, 2:27 pm

கணவரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரதரவென இழுத்துச் சென்று கொன்ற மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அமரேந்திர பாபு. இவரது மனைவி அருணா. இந்த நிலையில், இவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியை அடித்து துன்புறுத்தி வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அந்த வகையில், நேற்று முன்தினமும் அதேபோன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர், மனைவி அருணாவிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். மேலும், தனது பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, அருணாவைக் கொலை செய்வேன் எனவும் அவர் மிரட்டி உள்ளார். இதனால், பொறுமை இழந்த அருணா, ஆத்திரத்தில் ஒரு கட்டையை எடுத்து கணவரின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார்.

அதன் பிறகு, ஒரு கயிறை எடுத்து கணவரின் கழுத்தில் கட்டி உள்ளார். பின்னர், கணவரை வெளியே இழுத்துச் சென்று தரதரவென கொண்டு சென்றுள்ளார். இவ்வாறு கழுத்தில் கயிறு கட்டியதால் ஏற்பட்ட வலியால், அமரேந்திர பாபு துடித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அருணாவை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.

இதையும் படிங்க: பேசிக் கொண்டிருந்த காதலனை விரட்டிவிட்டு காதலி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. எனவே, இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள்ளாக, அமரேந்திர பாபு உயிரிழந்துள்ளார். இதனை போலீசாரும் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும், தற்போது, அருணா தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அருணாவைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 96

    0

    0

    Leave a Reply