நீங்க நம்பலனாலும் அதான் நெசம்.. ஸ்பீடு பிரேக்கரால் திரும்ப வந்த உயிர்!
Author: Hariharasudhan3 January 2025, 4:36 pm
உத்தரப் பிரதேசத்தில், இறந்துவிட்டார் என்ற நிலையில் கொண்டு சென்ற நபர், ஸ்பீடு பிரேக்கரில் ஏற்பட்ட குலுங்களில் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கடந்த டிசம்பர் 16ஆம் தேதி மகாராஷ்டிராவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. அப்போது, அவர்கள் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், என்னுடைய விவசாய நிலத்தில் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார் உல்பே என்ற நபர். அப்போது, அவருக்கு கடுமையான வாந்தி மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரால் நிற்க முடியவில்லை. எனவே, காஸ்பா பவ்டா என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை, அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், உல்பேவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், உடனடியாக மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படியும் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும், அவர் அங்கேயே சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். பின்னர், மருத்துவமனையில் செலுத்த வேண்டிய தொகை அனைத்தையும் செலுத்திவிட்டு, மருத்துவமனையில் இருந்து உடலை அடக்கம் செய்யும் முடிவுடன் அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, தங்களுடைய உறவினர்கள் அனைவருக்கும் உல்பே இறந்துவிட்டார் என்ற செய்தியையும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருக்கின்றனர். பின்னர், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை வீட்டிற்கிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது, செல்லும் வழியில் திடீரென ஸ்பீட் பிரேக்கரில் வாகனம் நின்றுள்ளது. இதனால் ஆமுபுலன்ஸ் குலுங்கி இருக்கிறது. அப்போது, அவரது கை லேசாக அசைந்துள்ளதை வாகனத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். மேலும், உறவினர்களில் ஒருவர் அவரது மணிக்கட்டையைத் தொட்டு பார்த்தபோது, அங்கு உயிர்நாடி இருப்பதை உணர முடிந்திருக்கிறது.
இதையும் படிங்க: எருமை மாடு.. பேப்பர் எங்கே? பொது மேடையில் உதவியாளரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்!
எனவே, உடனடியாக வாகனத்தை மருத்துவமனைக்கு திருப்பி உள்ளனர். முதலில் ஒரு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அங்கு இருக்கைகள் இல்லாமல் மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையிலே தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த டிசம்பர் 30ஆம் தேதி வீடு திரும்பியுள்ளார்.