நம்ம உடம்புல இந்த ஒரு உறுப்பு ஸ்ட்ராங்கா இருந்தா போதும் மொத்த ஆரோக்கியத்திற்கும் கேரண்டி உண்டு!!!

Author: Hemalatha Ramkumar
3 January 2025, 5:12 pm

ஆரோக்கியமான செரிமான அமைப்பு என்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு அடித்தளமாக அமைகிறது. ஏனெனில் செரிமானம் என்பது உணவை உடைப்பது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவது மற்றும் கழிவுகளை அகற்றுவது போன்ற பல்வேறு விஷயங்களுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கிறது. எனினும் செரிமான அமைப்பின் சமநிலை பாதிக்கப்படும் பொழுது அது நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அளவுக்கு அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் மலச்சிக்கல் அல்லது வயிற்று உப்புசம் ஏற்பட்டு செரிமான அமைப்பு பாதிக்கப்படுகிறது.

எனவே நம்முடைய உணவில் சிறிய அதே நேரத்தில் பயனுள்ள ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலமாக செரிமானத்தை மேம்படுத்தி, அசௌகரியத்தை தடுக்கலாம். உங்களுடைய குடல் சீராக செயல்படுவதற்கு உதவ நீங்கள் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு சாப்பிடுவது மற்றும் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளில் இருந்து விலகி இருப்பது போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். அந்த வகையில் உங்களுடைய செரிமானத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் சில உணவு சார்ந்த மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக நார்ச்சத்து 

தினமும் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும். நார்ச்சத்து என்பது மலச்சிக்கலை தடுப்பதற்கும், உணவு எளிதாக செரிமான அமைப்பில் நகர்வதற்கும் மிகவும் அவசியமான ஒரு ஊட்டச்சத்து.

நீர்ச்சத்து 

நீர்ச்சத்து குறைவாக இருந்தால் செரிமான அமைப்பு வேலை செய்வதற்கு சிரமப்படும். இதனால் அஜீரணம், வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படலாம். ஆகவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கும், உணவு குடலுக்குள் எளிதாக நகர்வதற்கும் உதவும்.

ப்ரோபயாடிக்ஸ் 

ப்ரோபயாடிக்ஸ் என்பது குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை பராமரிக்க உதவும் நல்ல பாக்டீரியாக்கள். இது பயனுள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: வெயிட் லாஸ் பயணத்துல இருக்கும் போது தப்பி தவறி கூட ரெஸ்டாரண்ட்ல இதெல்லாம் ஆர்டர் பண்ணி சாப்பிடாதீங்க!!!

சிறிய அளவில், அடிக்கடி உணவு சாப்பிடுவது

ஒரே நேரத்தில் அதிக அளவு உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக சிறிய அளவுகளில் அடிக்கடி சாப்பிடுங்கள். இது செரிமானத்திற்கு எளிதானதாக இருக்கும். மேலும் செரிமான உறுப்புகள் அளவுக்கு அதிகமாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

சர்க்கரையை குறைவாக சாப்பிடுவது 

சர்க்கரை அதிலும் குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் தின்பண்டங்களை தவிர்ப்பது வயிற்று உப்புசம், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Kalaiyarasan future plans சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா….மேடையில் நடிகர் கலையரசன் பரபரப்பு பேச்சு..!
  • Views: - 82

    0

    0

    Leave a Reply