வெண்டிலேட்டரில் ரகசிய கேமரா.. எம்எல்ஏவுக்கு சொந்தமான கல்லூரியில் பரபர விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2025, 7:58 pm

தெலுங்கானா மாநிலம் மேட்சல் நகரில் சி எம் ஆர் இன்ஜினியரிங் காலேஜ் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த கல்லூரி மாணவியர் விடுதியில் தங்கி தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவியர் விடுதியில் உள்ள குளியலறை ஒன்றில் ரகசிய கேமராவை பொருத்தி வீடியோ பதிவு செய்ததாக குற்றச்சாட்டுகள் ஏற்பட்டுள்ளன.

குளியலறை வெண்டிலேட்டரில் ரகசிய கேமராவை பார்த்ததாக மாணவிகள் குற்றம் சாட்டிய நிலையில் அங்கு பெரும் போராட்டம் வெடித்துள்ளது.

இதையும் படியுங்க: காவல்துறை கடமையை செஞ்சிட்டாங்க.. எங்க போராட்டம் வெற்றி… விடுதலையான பின் குஷ்பு கருத்து!

மாணவியர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாணவ அமைப்பினர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இது பற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஹாஸ்டல் சமையலறையில் பணியாற்றும் ஆறு ஊழியர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அவர்களுடைய செல்போன்களையும் பறிமுதல் செய்து அவற்றில் பதிவாகி இருக்கும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார் செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை மீட்டெடுத்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Bathroom Hidden Camera in College Hostel

இந்த நிலையில் ஹாஸ்டல் வார்டனிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Allu arjun Visit Kims Hospital சிறுவன் ஸ்ரீதேஜ்க்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு ஓடிய அல்லு அர்ஜூன்!
  • Views: - 94

    0

    0

    Leave a Reply