அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.. கே.பாலகிருஷ்ணனுக்கு சேகர் பாபு திடுக் பதில்!

Author: Hariharasudhan
4 January 2025, 12:37 pm

அவருடைய நெருடல் என்னவென்று எனக்கு புரியவில்லை, தெரிந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தைக் காண முடியும் என கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது.

மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன, அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது? போராட்டத்தைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமென்ன?

ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால், அதற்கான அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.

Sekar babu

இது, திமுக – சிபிஐஎம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதாரப் புகழ்ந்தவர் தான் அவர்.

அவருடைய நெருடல் என்னவென்று எனக்கு புரியவில்லை. தெரிந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தைக் காண முடியும். அதேநேரம், எங்களைப் பொறுத்தளவில் ஜனநாயகப்படி போராடுவதற்கு உரிமை கோருவோருக்கு, எங்களால் முடிந்த அளவிற்கு மறுப்பதில்லை.

இதையும் படிங்க: ஃபார்மில் இல்லைதான்.. ஆனால்.. கட் அன்ட் டைட்டாக பேசிய ரோகித் சர்மா!

மக்களுக்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கின்ற பொழுது, 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கோரிக்கைகளுக்காக போராடியவர்களுக்கு அனுமதி தந்தது போல், வேறு எந்த ஆட்சியிலும் அனுமதி தரப்படவில்லை.

அருமை அண்ணன் பாலகிருஷ்ணன்நேற்றைக்கு வரை இந்த ஆட்சியை புகழ்ந்து கொண்டிருந்தவர்தான். வரும் காலங்களில் அவர் புகழ்கின்ற அளவிற்கு அவருடைய தேவைகளை நிச்சயமாக செவி சாய்த்து, இந்த ஆட்சி நிறைவேற்றும். எல்லோருக்கும் எல்லாம் என்று கூறும் நம் முதலமைச்சர், நிச்சயம் இப்பிரச்னையையும் களைவார். மற்றபடி குற்றம் சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 101

    0

    0

    Leave a Reply