வெள்ளை சர்க்கரைக்கு பதிலா இந்த மாதிரி ஹெல்த்தி ஆப்ஷன் கூட யூஸ் பண்ணலாம்!!!

Author: Hemalatha Ramkumar
4 January 2025, 6:20 pm

இனிப்பு சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என்பது தெரிந்திருந்தாலும் பலரால் அதனை முற்றிலுமாக கைவிட முடியவில்லை. எனினும் சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான பிரச்சனைகளை உருவாகலாம். உடல் எடை அதிகரிப்பில் ஆரம்பித்து இதய நோய் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இதனால் ஏற்படும். இது பொதுவாக நாம் பருகக் கூடிய சாஃப்ட் டிரிங்க்ஸ், மிட்டாய்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் காணப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, சர்க்கரைக்கு பதிலாக நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு சில இயற்கை இனிப்பான்களும் உள்ளன.

இவை குறைந்த கிளைசைமிக் எண்களை கொண்டிருக்கின்றன.  இவற்றில் முக்கியமான வைட்டமின்களும் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் இருப்பதால் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பலன் தருகின்றது. நம்முடைய இனிப்பு பசியை கட்டுப்படுத்துவதற்கு இந்த ஆரோக்கியமான இனிப்பான்கள் உதவுகின்றன. இவை உடல் எடையை கட்டுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தடுக்கிறது. எனவே உங்களுடைய இனிப்பு பசியை திருப்திப்படுத்துவதற்கு உதவும் சில இயற்கை இனிப்பான்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்டிவியா 

சர்க்கரைக்கு பதிலாக ஆரோக்கியமான ஒரு இனிப்பு ஆப்ஷனை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஸ்டிவியா ஒரு சிறந்த பதிலாக இருக்கும். இதனை நீங்கள் டீ, காபி, ஸ்மூத்தி மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் பயன்படுத்தலாம்.

தேன் 

வைட்டமின்கள், மினரல்கள் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்த தேன் பதப்படுத்தப்பட்ட சர்க்கரையைப் போல அல்லாமல் நம்முடைய உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக இதில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் C போன்ற நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்துனை சத்துக்களும் உள்ளது.

மேப்பில் சிரப் 

பிரபலமான இந்த இனிப்பானில் அதிக ஃபிளேவர் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான நன்மைகள் நிரம்பியுள்ளது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குறிப்பாக பீனாலிக் காம்பவுண்டுகள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடவும், பொதுவான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர சான்ஸ் நிறைய இருக்காம்… யார் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்???

தேங்காய் சர்க்கரை

தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சர்க்கரையில் இரும்பு சத்து, சிங்க், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பிற ஆரோக்கியமான மினரல்கள் அடங்கியுள்ளது. மேலும் இதில் உள்ள இனுலின் என்ற ப்ரீ-பயாடிக் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.

அகேவ் சிரப்பு

குறைவான கிளைசிமிக் எண் காரணமாக இது நம்முடைய ரத்த சர்க்கரை அளவுகளில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. டயாபடீஸ் நோயாளிகள் இடையே இந்த அகேவ் சிரப்பு ஒரு பிரபலமான ஆப்ஷனாக இருக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 80

    0

    0

    Leave a Reply