பெரும் சோகத்தில் ரிலீஸ் ஆகும் மதகஜராஜா…படத்தில் நடித்த பல பிரபலங்களின் நிலைமை என்ன ஆச்சுன்னு தெரியுமா ..!

Author: Selvan
5 January 2025, 3:05 pm

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகியிருந்த மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் விஷாலுடன் அஞ்சலி,வரலட்சுமி,சந்தானம்,பிரகாஷ்ராஜ்,லொள்ளுசபா,மனோகர் சடகோபன் ரமேஷ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Madha Gaja Raja Pongal release 2025

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த பல பிரபலங்கள் இன்று உயிருடன் இல்லை என்ற தகவல் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் மணிவண்ணன்,மனோபாலா,மயில்சாமி,சிட்டிபாபு,சீனு மோகன் போன்றோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: பிரபல நடிகையை காதல் செய்த சுந்தர் சி…கெடுத்துவிட்ட குஷ்பூ…!

விஜய் ஆண்டனி இசையில் உருவாகியிருக்கும் இப்படம் கடும் போட்டிக்கு மத்தியில் நீண்ட வருடத்திற்கு பிறகு திரைக்கு வருகிறது.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

  • Kovai Sarala Talked About Vadivelu வடிவேலு கூட நடிக்கணும்னா அதை பண்ணியே ஆகணும்.. நான் அனுபவிச்ச வேதனை : கோவை சரளா ஓபன் டாக்!
  • Views: - 60

    0

    0

    Leave a Reply