பத்திரிக்கை ரெடி கல்யாணம் பண்ண ரெடியா…அதிர்ச்சியில் நடிகை மாளவிகா…!
Author: Selvan5 January 2025, 5:51 pm
வித்தியாசமாக ப்ரொபோஸ் செய்த ரசிகர்
தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மாளவிகா மோகனன்.இவர் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதால்,இவருக்கு மிகப்பபெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு வந்த ஒரு வித்தியாசமான ப்ரோபோசலை கூறியுள்ளார்.அதாவது மாஸ்டர் பட ஷூட்டிங் போது,நான் ஷூட்டிங் முடித்து ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தேன்,அப்போது என்னை நோக்கி ஒருவர் ஓடி வந்து கார்டு ஒன்றை கொடுத்தார்,நானும் ஆட்டோகிராப் வாங்க தான் கொடுக்கிறார் என அதை வாங்கி பார்த்தேன்,அதில் என்னுடைய பெயரும் அவருடைய பெயரும் போட்டு திருமண பத்திரிகையை அடித்து என்னிடம் கொடுத்தார்.
இதையும் படியுங்க: சினிமாவில் 50 ஆண்டு சாதனை…ரீரிலீஸில் குதிக்கும் ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்…!
அவரிடம் என்ன சொல்லுவதுனு தெரியாமல் நான் அதிர்ச்சியில் நின்ற போது என்னை என் கூட வந்த ஊழியர்கள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.எனக்கு வந்த ப்ரோபோசலில் இது வித்தியாசமானது என அந்த பேட்டியில் கூறிருப்பார்.