“கேம் சேஞ்சர்”பட விழாவில் இரண்டு ரசிகர்கள் பலி…நிவாரணத்தொகையை அறிவித்த படக்குழு…உயிரிழப்புக்கு காரணம் என்ன!

Author: Selvan
6 January 2025, 5:33 pm

பட விழாவில் ஏற்பட்ட சோகமான நிகழ்வு

சமீபத்தில் புஷ்பா-2 படத்தின் சிறப்பு காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்தார்.இதற்காக அல்லு அர்ஜுன் மீது பலரும் குற்றசாட்டுகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்து சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Game Changer promotional event tragedy

தற்போது ஆந்திராவில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்திருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரவா மணிகண்டா,தொக்கடா சரண் என இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பட விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உரிழந்துள்ளனர்.

இதையும் படியுங்க: ரேஸுக்கு தயாரான அஜித்…கட்டியணைத்து வழியனுப்பிய ஷாலினி… வைரலாகும் வீடியோ..!

இந்த தகவலை அறிந்த பட தயரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு இருவருக்கும் தலா 5-லட்சம் தொகையை கொடுத்துள்ளார்.மேலும் படத்தின் X-தளத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்த்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

கேம் சேஞ்சர் படம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதால்,இந்த சோகமான சம்பவம் படக்குழுவை கவலையடைய வைத்திருக்கிறது

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 84

    0

    0

    Leave a Reply