சளி, காய்ச்சல் இருக்கும் போது இந்த வகை கிச்சடி சாப்பிட்டா சீக்கிரமே சரியாகிவிடும்!!!
Author: Hemalatha Ramkumar6 January 2025, 4:36 pm
பொதுவாக குளிர்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இது மாதிரியான பிரச்சனைகள் வரும் பொழுது உடனடியாக மருந்து மாத்திரைகளை நாடுவதற்கு பதிலாக ஒரு சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்து பார்ப்பது உதவக்கூடும். இந்த சமயத்தில் நாம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எளிதில் ஜீரணமாக கூடிய மற்றும் நம்முடைய நோய் தடுப்பு அமைப்புக்கு வலிமை சேர்க்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது பிரச்சினைகளிலிருந்து விரைவில் மீண்டு வருவதற்கு உதவும். அந்த வகையில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கும் பொழுது நாம் சாப்பிட வேண்டிய ஒரு சிறந்த உணவு மற்றும் மருந்து கிச்சடி. அரிசி மற்றும் பருப்பு சேர்ந்த கிச்சடி நம்முடைய பசியை மட்டுமல்லாமல் உடலில் உள்ள பிரச்சனைகளையும் போக்க வல்லது.
இந்த கிச்சடியில் சேர்க்கப்படும் மூலிகைகள், மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகள் குறிப்பிட்ட சில உடல்நல பிரச்சனைகளை எதிர்த்து போராடுவதற்கு உதவுகிறது. கிச்சடியில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள் மற்றும் பிற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இது செரிமானத்திற்கு உதவி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இழந்த ஆற்றலை மீண்டும் பெறுவதற்கு உதவுகிறது. அப்படி பார்க்கும்போது சளி, காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கும் போது நீங்கள் சாப்பிட வேண்டிய ஐந்து கிச்சடி வகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாசிப்பருப்பு கிச்சடி
பாசிப்பருப்பு சேர்த்து கிச்சடி செய்து சாப்பிடும் பொழுது அது செரிமானமாவதற்கு எளிதானதாகவும், தொற்றை எதிர்த்து சண்டையிடுவதற்கு நம்முடைய உடலுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கிறது.
இஞ்சி எலுமிச்சை கிச்சடி
இந்த உணவு சளி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்துவதற்கும், விரைவாக உங்களை குணப்படுத்தி, புத்துணர்ச்சி வழங்குவதற்கும் உதவுகிறது.
மஞ்சள் இலவங்கப்பட்டை கிச்சடி
இந்த கிச்சடி குறிப்பாக இருமலை குறைத்து, தொண்டை புண்ணை ஆற்றி, சுவாசத்தை மேம்படுத்துகிறது. மேலும் தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கும் உதவுகிறது.
இதையும் படிச்சு பாருங்க: அடிக்கடி ஹேர் பிரஷ் யூஸ் பண்ணா தலைமுடி வளரும்னு சொன்னாங்களே… அம்புட்டும் கட்டுக்கதையா…???
காய்கறி கிச்சடி
முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கிச்சடி வகை செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள கழிவுகளை அகற்றி, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. மேலும் இதன் கதகதப்பு தன்மை நம்முடைய உடலை ஆற்றும் வகையில் அமைகிறது.
சீரகம் மற்றும் பூண்டு கிச்சடி
இந்த உணவு காம்பினேஷன் செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உடல்நல பிரச்சனைகளை எதிர்த்து சண்டையிடும் உடலின் திறனை அதிகரிக்கிறது. சீரகத்தின் கதகதப்பான மற்றும் பண்புகள் பூண்டின் குணப்படுத்தும் பண்போடு இணைந்து நம்முடைய செரிமான ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த சாய்ஸாக அமைகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.