மிரட்ட வைக்கும்”முஃபாஸா தி லயன் கிங்“வசூல்
இந்திய சினிமாவில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா2 திரைப்படம் நாளுக்கு நாள் வசூலை குவித்து தற்போது 1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஆனால் புஷ்பா2-வை தூக்கி சாப்பிடும் அளவிற்கு உலகளவில் முஃபாஸா தி லயன் கிங் வசூல் சாதனை படைத்துள்ளது.கடந்த மாதம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி ஆங்கிலம்,ஹிந்தி தெலுங்கு,தமிழ் என பல மொழிகளில் இப்படம் வெளியானது.
இப்படத்தை பல நட்சத்திரங்கள் டப்பிங் பேசியிருந்த நிலையில்,ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.தமிழ்நாட்டில் இப்படம் 25 கோடி வசூலை பெற்றுள்ளது,அதேபோல் இந்தியாவில் 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இதையும் படியுங்க: “Sawadeeka”பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சின்னத்திரை ஜோடியின் சுட்டி குழந்தைகள்..வைரலாகும் வீடியோ..!
படம் ரிலீஸ் ஆகி 15 நாட்கள் ஆன நிலையில் உலகளவில் 3200 கோடி வசூலை அடைந்துள்ளது.இந்த வசூல் புஷ்பா 2-வின் உலக வசூலை விட பல மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.குறிப்பாக இப்படம் இந்தியாவை விட பிரான்ஸ்,இங்கிலாந்து,மெக்சிகோ இத்தாலி,ஜெர்மனி போன்ற நாடுகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.