தினமும் குடி,கும்மாளம்…இவருக்கு எதுக்கு கல்யாணம்…பிரேம்ஜியை வறுத்தெடுத்த பிரபலம்..!

Author: Selvan
7 January 2025, 12:51 pm

பிரேம்ஜியின் பக்கா பிளான்

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளரின் மகன்களில் ஒருவர் நடிகர் பிரேம்ஜி.இவர் பல படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் பல பாடல்களை பாடியும் அசத்தியிருக்கிறார்.

இவர் பல பேட்டிகளில் கல்யாணமே பண்ண மாட்டேன் என்றும்,இப்படியே சிங்கிள் ஆக வைப் பண்ணிட்டு ஜாலியாக இருக்க போகிறேன் என்று சொல்லிட்டு இருந்தார்.ஆனால் திடீரென தன்னுடைய 45 வயதில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.அதுவும் அந்த பெண்ணை காதலித்து கல்யாணம் பண்ணியுள்ளார்,இவர்களுடைய திருமணம் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் மிக எளிமையாக நடந்தது.

Premgi and indu love story

இவர்களுடைய திருமணத்திற்கு பெண் வீட்டாருக்கு முழு சம்மதமே இல்லை,திருமண ஆல்பத்தில் கூட அப்பா,அம்மா,தாத்தா,பாட்டி,தம்பி போட்டோக்களை எடிட் செய்து தான் இணைத்தோம் என பிரேம்ஜி மனைவியான இந்து சமீபத்திய ட்டியில் கூறியிருப்பார்.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளரான சேகுவேரா சமீபத்திய பேட்டியில் பிரேம்ஜியின் திருமணத்தை குறித்து விவாதித்திருப்பார்.அதில் தினமும் ,குடி குத்துன்னு இருந்துவிட்டு காலம் போன வயதில் திருமணம் செய்துள்ளார்,அதுவும் தன்னை விட 20 வயது குறைவான பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.அவருக்கு 65ஆகும் போது அந்த பெண்ணுக்கு 45 வயது தான் ஆகும்,அப்போது அவர்களுக்குள் எவ்வளவு கஷ்டங்கள் எல்லாம் வரும்,இதெல்லாம் யோசித்து பார்க்க வேண்டாமா என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: GOAT படத்தில் நடித்ததால் மன அழுத்தம் கிடைச்சது தான் மிச்சம்.. வேதனையில் நடிகை!

மேலும் பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய பெண்ணை ஒரு நல்ல பையனுக்கு அதுவும் வயது வித்தியாசம் கம்மியாக உள்ள நபருக்கு தான் கட்டி வைக்க ஆசைப்படுவார்கள்,அப்படி தான் இந்துவின் பெற்றோரும் ஆசைப்பட்டார்கள்,ஆனால் நாங்கள் காதலித்தோம் அதனால் கல்யாணம் பண்ணுகிறோம் என்று பண்ணியது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் அவர் பிரேம்ஜி மட்டுமில்லை பலர் நடிகர்கள் தங்களுடைய இளம் வயதில் ஜாலியாகி ஊர் சுற்றி செலவு செய்துவிட்டு,காலம் போன போக்கில் வயது குறைந்த இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி கல்யாணம் செய்து செட்டில் ஆகிவிடுகிறார்கள்,இதெல்லாம் ரொம்ப தப்பு என அந்த பேட்டியில் சேகுவேரா கூறியிருப்பார்.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 77

    0

    0

    Leave a Reply