சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா….மேடையில் நடிகர் கலையரசன் பரபரப்பு பேச்சு..!

Author: Selvan
7 January 2025, 5:16 pm

இனி அந்த காட்சியில் நடிக்க மாட்டேன்

தமிழ் சினிமாவில் பல படங்களில் தன்னுடைய அசாதாரண நடிப்பால்,ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கலையரசன்.இவர் மெட்ராஸ் திரைப்படத்தில் கார்த்திக்கு நண்பனாக நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பை பெற்றார்.

Kalaiyarasan  avoid second hero role

இப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் வெயிட் ஆன சைடு ரோலில் நடித்து வந்தார்.இவர் தனக்கு கொடுக்க கூடிய எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக நடித்து கொடுப்பவர்,இவர் பெரும்பாலான படங்களில் சில காட்சிகளில் மட்டும் வந்து பின்பு அவரை இறந்தது போல் இயக்குனர் காட்டி விடுவார்கள்.

இதையும் படியுங்க: பதுங்கி பாயும் மதகதராஜா…மஜாவா வெளிவந்த படத்தின் ட்ரைலர்…!

மெட்ராஸ் மற்றும் வாழை திரைப்படத்தில் கூட அவர் இறந்து விடுவார்,இந்த நிலையில் அவருடைய நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மெட்ராஸ்காரன் திரைப்படத்தின் பட ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “மலையாள சினிமாவில் பல நடிகர்கள் நல்ல படங்கள் வந்தால் தயங்காமல் அந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.அந்த மாதிரி தான் நானும் பல படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வருகிறேன்.

ஆனால் கதை எழுதும் போதே சாவு கதாபாத்திரம் வந்தால்,அதில் என் பெயரை சேர்த்து விடுகிறார்கள்,இனிமேல் நான் ஹீரோவாக நடிக்கவே பெரும்பாலும் முயற்சி பண்ணுவேன்,அதைத்தவிர்த்து கதைக்கு ஏற்றாற்போல வலுவான கதாபாத்திரம் இருந்தால்,அதை ஏற்று நடிக்க திட்டமிடுவேன் என கலையரசன் கூறிருப்பார்.

  • Ajith Kumar Vidaamuyarchi release date விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வந்தாச்சு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
  • Views: - 93

    0

    0

    Leave a Reply