டெய்லி உண்டாகுற ஸ்ட்ரெஸ் குறைக்க இத விட ஈசியான வழி இருக்கவே முடியாது!!!

Author: Hemalatha Ramkumar
8 January 2025, 11:14 am

மன அழுத்தம் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அழையா பிருந்தாளியாக மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் “மன அழுத்தம்” என்ற வார்த்தையை அடிக்கடி கேட்க வேண்டிய நிலை உள்ளது. ஒருவருடைய வயது அல்லது பேக்ரவுண்ட் எதுவாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் அனைவருமே ஏதோ ஒரு வித மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், பணி அழுத்தம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் இந்த மன அழுத்தத்திற்கு காரணமாக இருக்கிறது. இதனை நிர்வகிக்காமல் அப்படியே விட்டு விட்டால் நாள்பட்ட மன அழுத்தம் மோசமான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது. உதாரணமாக இதனால் பதட்டம், மனசோர்வு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி, இதய நோய் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

நாள்பட்ட மன அழுத்தம் என்பது நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் மனநலனையும் தாக்குகிறது. இதனால் உறவுகள் மற்றும் நம்முடைய வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படுகிறது. ஆகவே தினசரி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிமையான மற்றும் பயனுள்ள வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாசிட்டிவாக இருக்கவும்

பாசிட்டிவான மனநிலையை கொண்டிருப்பது என்பது மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு வலிமையான கருவி. எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவற்றில் கவனம் செலுத்தி, உங்களுடைய மனதை அமைதிப்படுத்துங்கள். பாசிட்டிவாக இருப்பதன் மூலமாக உங்களால் எந்த ஒரு சவாலையும் எளிமையாக சமாளிக்க முடியும். மேலும் இதனால் மன நிம்மதியோடு, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

மனதிற்கு ஓய்வு தரும் நுட்பங்கள் 

மனதை அமைதிப்படுத்துவதற்கு உதவும் ஒரு சில உடற்பயிற்சிகளை செய்வது மன அழுத்தத்தை குறைப்பதற்கான நுட்பம். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தசைகளை அமைதிப்படுத்துவது, தியானம் போன்றவை மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி டென்ஷன் மற்றும் பதட்டத்தை போக்கும். தினமும் இதனை செய்யும் பொழுது உங்களுடைய உணர்வுகள் சீராக்கப்பட்டு, இதயத்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் இல்லாத நிலைக்கு செல்வீர்கள்.

பிறரோடு நேரம் கழித்தல்

பிறரோடு நேரத்தை செலவு செய்வது என்பது மன அழுத்தத்தை குறைப்பதற்கு பயனுள்ள மற்றுமொரு யுக்தி. அது குடும்பமாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒன்றாக இருக்கும் பொழுது உங்களை மறந்து மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். எப்பொழுதும் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். இது வித்தியாசமான யோசனைகளை ஏற்படுத்தி, உங்களை அளவுக்கு அதிகமாக சிந்திக்க வைக்கும். இதனால் மன அழுத்தம் அதிகமாகும்.

டைரி எழுதும் பழக்கம்

தினமும் நடக்கக்கூடிய விஷயங்களை ஒரு டைரியில் எழுதுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய யோசனைகள், உணர்வுகள் ஆகியவற்றை எழுதுவது உங்கள் மனதில் இருக்கும் அனைத்தையும் அவிழ்த்து விடுவதற்கு உதவும். இதனால் உங்கள் உடல் மற்றும் மனது அமைதி பெறும்.

இதையும் படிச்சு பாருங்க:  HMPV கொரோனா வைரஸ் போன்றதா… இது பரவுமா… அனைத்து கேள்விகளுக்கான பதில் இதோ!!!

எச்சரிக்கையாக இருப்பது 

எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து நிதானமாக செயல்படுவது மன அழுத்தத்தை குறைக்கும். வாழ்க்கையின் இந்த தருணத்தில் கவனம் செலுத்தி, கடந்த கால கஷ்டங்களை மறந்து விடுங்கள். அதே நேரத்தில் உங்கள் எதிர்காலத்தை பற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். உங்களுடைய மூச்சு, உடல் மற்றும் சுற்றுச்சூழலை கூர்ந்து கவனித்து, அமைதியையும் தெளிவையும் பெறுங்கள். இதனை பின்பற்றுவது உங்கள் மனதை அமைதிப்படுத்தி உடலை ஆற்றும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • Kingston movie teaser திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
  • Views: - 45

    0

    0

    Leave a Reply