ஹன்சிகாவால் எனக்கு வந்த நோய்.. பரபரப்பு புகாரில் வழக்குப்பதிவு!

Author: Hariharasudhan
8 January 2025, 12:11 pm

நடிகை ஹன்சிகா மோத்வானி குடும்பத்தினர் மீது அவரது அண்ணி குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளதன் படி மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மும்பை: பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது சகோதரர் பிரசாந்த் மோத்வானி. கடந்த 2020ஆம் ஆண்டு இவருக்கும், தொலைக்காட்சி நடிகை முஸ்கன் நான்சிக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், இரண்டு ஆண்டுகளிலே, அதாவது 2022ஆம் ஆண்டே இருவரும் பிரிந்தனர்.

இதனையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஹன்சிகா மோத்வானி குடும்பத்தின் மீது அவரது அண்ணி முஸ்கன் நான்சி குடும்ப வன்முறை புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “ஹன்சிகா மோத்வானியும், அவரது தாயார் மோனோ மோத்வானியும், என்னுடைய திருமண வாழ்க்கையில் தலையிட்டு, எனக்கும், என்னுடைய கணவருக்கும் இடையில் பிரச்னையை ஏற்படுத்தினர்.

எனது கணவர், அவரது தாயார் மற்றும் சகோதரி ஹன்சிகா மோத்வானி ஆகிய மூவரும் குடும்ப வன்முறையில் ஈடுப்பட்டனர். அவர்களால் நான் தாக்குதலுக்கு உள்ளானேன். இதன் காரணமாக, ‘பெல்ஸ் பால்சி’ (முகத்தின் ஒருபகுதி தசைகளின் செயலிழப்பு) என்ற நோயால் பாதிக்கப்பட்டேன்.

Hansika Motwani Mumbai Police

அது மட்டுமல்லாமல், மூன்று பேரும் என்னிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்தைக் கேட்கிறார்கள். சொத்து முறைகேட்டிலும் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புகாரனது, மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நம்ம பொண்ணு பிக் பாஸ்ல ஜெயிக்கணும்.. ஓட்டு போடுங்க : நடிகர் புகழ் வேண்டுகோள்!

இந்தப் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 498-A, 323, 504, 506 மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் ஹன்சிகா மோத்வானி குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Kingston movie teaser திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
  • Views: - 109

    0

    0

    Leave a Reply