கொஞ்சம் இத பண்ணுங்க அனிருத்.. ஆர்டர் போட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!

Author: Hariharasudhan
8 January 2025, 1:55 pm

அனிருத் கிளாசிக்கல் இசை படித்து, அதனைச் செய்ய வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ள ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படம் ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் தினத்தை ஒட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக் குழுவினர் உடன் இசை அமைப்பாளர் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனையடுத்து, இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் பேசினார்.

அப்போது அவர், “இப்போது அனிருத் மிக நன்றாக இசையமைக்கிறார். அவர் இவ்வளவு பெரிய படத்துக்கு ஹிட் கொடுக்கிறார். 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அதில் நிலைத்து நிற்பது என்றால், திறமை இல்லாமல் அது நடக்காது. அதையெல்லாம் செய்துவிட்டு, தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான் எனச் சொல்லும் அந்தப் பணிவு ஆச்சரியப்பட வைக்கிறது.

AR Rahman about Anirudh

உங்களுடைய வெற்றிக்கு எனது பாராட்டுகள். உங்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். கிளாசிக்கல் இசை படித்துவிட்டு, அதில் நீங்கள் நிறைய பாடல்கள் பண்ண வேண்டும். அதை நீங்கள் செய்தால், தற்போதைய இளம் தலைமுறையினருக்கு அந்த இசை போய்ச் சேரும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாலியல் தரகராகவே மாறிய தோழி.. பேரம் பேசி வன்கொடுமை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

ஜெயம் ரவி, நித்யா மேனன், ஜான் கொக்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக நாளை மறுதினம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

  • Kingston movie teaser திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
  • Views: - 92

    0

    0

    Leave a Reply