தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்… சர்ப்ரைஸ் வைத்த படக்குழு!
Author: Udayachandran RadhaKrishnan8 January 2025, 1:44 pm
நடிகர் விஜய் தனது கடைசிப் படம் என தளபதி 69வது படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்தை ஹெச் வினோத இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்க : வடிவேலு கூட நடிக்கணும்னா அதை பண்ணியே ஆகணும்.. நான் அனுபவிச்ச வேதனை : கோவை சரளா ஓபன் டாக்!
தளபதி 69ல் இணைந்தார் TEEJAY
படம் பற்றி அறிவிப்பு வெளியானதும் ஏகப்பட்ட அப்டேட்கள் வெளியாகின. குறிப்பாக பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜாஹெக்டே என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பது குறித்து வெளியாகின.
அதே போல படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் மேலும் ஒரு பிரபலம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்த டிஜே தற்போது இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் கமிட் ஆகியுள்ள மமிதா பைஜூவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும், சிறுவயது முதல் விஜய் படத்திற்கு நான் அடிமை, அவருடைய படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி மிஸ் பண்ணுவேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.