வாழ்த்து கூறச் சென்ற ப்ளஸ் 1 மாணவர்கள்.. அரசுப் பள்ளி ஆசிரியர் கைதானதன் பின்னணி!

Author: Hariharasudhan
8 January 2025, 2:40 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பிஎஸ்கே பார்க் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருமணமான நிலையில், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அட்டப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்தார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணியிட மாறுதல் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து உள்ளார். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களுக்கு இவர் கேக் கொடுத்துள்ளார்.

அப்போது, அருகே இருந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கேக் கொடுத்துள்ளார். இதனையடுத்து, தற்போது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 2ஆம் தேதி, தலைமை ஆசிரியர் ராஜேஷுக்கு மாணவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

அப்போது, 11ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கு ஆசிரியர் ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்துள்ளதாகத் தெரிகிறது. எனவே, இது தொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில், இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பாலியல் தரகராகவே மாறிய தோழி.. பேரம் பேசி வன்கொடுமை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராஜேஷ், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர், இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ராஜேஷைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். தொடர்ந்து, அவரை ஜனவரி 21ஆம் தேதி வரை காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

  • Kingston movie teaser திகிலூட்டும் ஜி.வி.பிரகாஷின் “கிங்ஸ்டன்”…செம திரில்லரில் வெளிவந்த படத்தின் டீஸர்..!
  • Views: - 65

    0

    0

    Leave a Reply