திடீரென கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Author: Hariharasudhan10 January 2025, 10:28 am
சென்னையில், இன்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: அனைவருக்கும் இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் எனக் கூறிக்கொண்டு, தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. 2024ஆம் ஆண்டின் முடிவில் குறைந்த தங்கம் விலை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்ந்தது. பின்னர், வார இறுதி நாட்களில் குறைந்த தங்கம் விலை, மீண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன்படி, இன்று (ஜன.10) சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தப் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? காலத்தால் அழியாத பாடகர் ஜெயச்சந்திரனின் சுவடுகள்!
அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7 ஆயிரத்து 945 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 63 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.