கணவரைப் பிரிந்த சிறுமி காதலனுடன் ஓட்டம்.. அப்போ அந்த குழந்தை? விசாரணையில் திடுக் தகவல்!

Author: Hariharasudhan
10 January 2025, 11:13 am

சென்னையில், 16 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் பிடித்த நிலையில், அச்சிறுமிக்கு ஏற்கனவே குழந்தை உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை: சென்னை, பெரம்பூர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். மேலும், இவர் பாரிமுனையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, சிறுமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக கணவரைப் பிரிந்து, தனது பெற்றோருடன் சிறுமி வசித்து வந்தார்.

அப்போது, சதீஷ்குமார் என்ற இளைஞர் உடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 3ஆம் தேதி சதீஷ்குமார் உடன் சிறுமி சென்றுள்ளார். இந்தப் புகாரின் பேரில், போலீசார் நேற்று முன்தினம் திருவாலங்காடு பகுதியில் தங்கியிருந்த சிறுமி மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த டேனி என்கிற சதீஷ்குமாரை (19) பிடித்தனர்.

POCSO Act

பின்னர், சிறுமியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமி 2 வருடத்திற்கு முன்பு பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தபோது கர்ப்பமாக இருந்த காலத்தில், மருத்துவமனையில் போலியான வேறு ஒரு நபரின் ஆதார் கார்டைக் கொடுத்து, வயதை மறைத்து குழந்தை பெற்றுக் கொண்டதும், அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, தற்போது சதீஷ்குமாரை காதலித்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: 2 மனைவி இருந்தும் நடிகை சுவலட்சுமிக்கு காதல் வலை வீசிய பிரபல நடிகர்.. பதிலடி கொடுத்த நடிகை!

இதனையடுத்து, சிறுமியின் கணவர் பிரகாஷ் மற்றும்காதலன் சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Suchitra Vishal இரவில் விஷாலை வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்ட? சுசித்ராவை விளாசும் பிரபலம்!
  • Views: - 41

    0

    0

    Leave a Reply