7 நாளும் வேலை பார்க்கனுமா? கொதித்தெழுந்த தீபிகா படுகோன்!

Author: Hariharasudhan
10 January 2025, 12:45 pm

7 நாட்களும் வேலை பார்க்க வேண்டும் என்ற L&T தலைவரின் கருத்துக்கு நடிகை தீபிகா படுகோன் எதிர்கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை: இது தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் வெளியிட்டு உள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள சில நபர்கள் இது போன்ற அறிக்கைகளை வெளியிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அது மட்டுமின்றி, Mental Health Matters” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் கூறுகையில், “ஞாயிற்றுக் கிழமைகளில் என் நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு நான் வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களை வேலை செய்ய வைத்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனெனில், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்.

Deepika Padukone about L & T President 90 hrs speech

நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உங்களால் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். என்னுடைய சீன நண்பர் ஒருவர், ’சீனாவால் அமெரிக்காவை வெல்ல முடியும். காரணம், சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கின்றனர், அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள்’ என்றார்.

இதையும் படிங்க: இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் அடித்துக் கொலை : திமுகவின் கூட்டணி கட்சிக்கே இந்த நிலைமையா?

அப்படியானால் அதுதான் உங்களுக்கான பதில். நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்க வேண்டுமென்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்” எனக் கூறி இருந்தார். இவரது இந்த கருத்துக்கு பலரும் எதிர்மறை கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

  • கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!