தளபதி 69-ல் பிரேக்.. அடுத்த மாதம் புதிய தவெக நிர்வாகிகளுக்கு Interview?

Author: Hariharasudhan
10 January 2025, 3:14 pm

புதிதாக நியமிக்கப்பட உள்ள தவெக மாவட்டச் செயலாளர்கள் உடன் விரைவில் விஜய் தனித்தனியே சந்திப்பை ஏற்படுத்த உள்ளார்.

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. ஆனால், இக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை.

விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, கட்சியின் தலைவர் விஜய் விரைவில் மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில், இந்த நியமனங்கள் தொடர்பாகத்தான் இன்று மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

முக்கியமக, 2 அல்லது 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் 105 முதல் 110 மாவட்டச் செயலாளர்களை கட்சி சார்பில் நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்கான வரையறையையும் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

TVK meeting

இந்த நிலையில், ஏற்கனவே மாவட்டப் பொறுப்பாளர்களாக உள்ள நபர்கள் மாவட்டச் செயலாளராக நியமனம் செய்யப்படவில்லை என்றால், கட்சியில் எந்த ஒரு சலசலப்பும் ஏற்படுத்தக் கூடாது என்பது தொடர்பாகவும், நியமனம் செய்யப்படும் நபர்கள் மாவட்டங்களில் கட்சியின் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை எப்படி நியமனம் செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் இதில் ஆலோசனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கைது!

இதனையடுத்து, இந்தக் கூட்டத்தின் அடிப்படையில் இம்மாத இறுதியில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உடன் தனித்தனியே விஜய் சந்திப்பை ஏற்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Atlee’s Bollywood Production Updates ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
  • Views: - 51

    0

    0

    Leave a Reply