’அவரு என் மாமனார்..’ மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்.. தகாத உறவால் விபரீதம்!

Author: Hariharasudhan
10 January 2025, 3:55 pm

உத்தரப் பிரதேசத்தில் மாமனார், மருமகளின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியாரின் தலையில் செங்கல்லைத் தூக்கி போட்டு கொலை செய்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது மகன் தீபக். இந்த நிலையில், இவரது கணவர், குர்கு யாதவ் என்பவருக்கும், மருமகளுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீதா தேவி வெளியே சென்றிருந்த நிலையில், மாமனாரும் மருமகளும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்தை பார்த்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

அப்போது திடீரென வீட்டிற்குச் சென்று இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த கீதா தேவி, கையும் களவுமாக அவர்களைப் பிடித்துள்ளார். இதனை தீபக் மற்றும் அக்கம் பக்கதினரிடம் சொல்லிவிடுவேன் எனவும் மாமியார் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாமனாரும், மருமகளும் சேர்ந்து கீதா தேவியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

இதன்படி, கீதா தேவியை வீட்டிற்கு வரவழைத்து, தனது மாமியாரின் தலையில் செங்கல் மற்றும் மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார் மருமகள். பின்னர், இந்தக் கொலையை மறைக்க மாமியாரின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு, அவரைக் காணவில்லை என நாடகமாடியுள்ளனர்.இதனையடுத்து, கணவர் தீபக்கிடம் தனது மாமியார் அடையாளம் தெரியாத நபருடன் பைக்கில் எங்கோ சென்றதாக கூறியுள்ளார்.

Mother in law murdered for father in law daughter in law extra marital affair

தொடர்ந்து கணவர் குர்கு யாதவ், வெள்ளிக்கிழமை கீதா தேவியை காணவில்லை என்று புகார் அளித்தார். விசாரணையைத் தொடங்கிய போலீசார், கடந்த சனிக்கிழமை காலை கழிவறை தொட்டியில் கீதாதேவியின் சடலத்தை மீட்டனர். ஆனால், தலையில் பலத்த காயம் காரணமாக அவர் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: 10-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கைது!

பின்னர், மாமனார், மருமகள், மகன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனையடுத்து, மாமனார், மருமகள் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 58

    0

    0

    Leave a Reply