மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!

Author: Selvan
10 January 2025, 4:16 pm

மகனின் பட விழாவில் அமீர் கானின் வைரல் பேச்சு

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமீர் கான் தன்னுடைய மகனுக்காக நீண்ட நாள் கெட்ட பழக்கத்தை விடப்போவதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

இவருடைய நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி,ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

Bollywood Actor Aamir Khan News

அதன் பிறகு அவர் சினிமாவில் இருந்து கொஞ்ச நாள் விலக போவதாக அறிவித்திருந்தார்.இதனால் கடந்த காலமாக அமீர் கான் படங்கள் ஏதும் வெளியாகவில்லை,அவருடைய அடுத்த பட குறித்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

இதையும் படியுங்க: துபாய் ரேஸில் பல திக் திக் சவால்களை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!

இந்த நிலையில் அமீர் கான் மகனான ஜுனைத் கான் “லவ்யப்பா” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் கான் என்னுடைய மகன் ஹீரோவாக நடிக்கும் லவ்யப்பா படம் வெற்றி பெற்றால் நான் இனிமேல் புகைபிடிக்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 51

    0

    0

    Leave a Reply