கோதாவில் கரூர் டீம்? செந்தில் பாலாஜிக்கு வலுத்த சிக்கல்!

Author: Hariharasudhan
10 January 2025, 5:57 pm

மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பார்களில் கரூர் டீம் வசூல் வேட்டையில் மிரட்டி ஈடுபடுவதாக பார் உரிமையாளர்கள் சிலர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

கரூர்: தற்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, தமிழகம் முழுவதும் ‘கரூர் டீம்’ என்ற பேச்சு, டாஸ்மாக் பார்களில் ஒலித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் கசிந்தன.

இதன்படி, டாஸ்மாக் பார்களில் அதிரடி வசூல், பாட்​டிலுக்கு 10 ரூபாய் கூடு​தல் உள்ளிட்ட விவகா​ரங்​களில் கரூர் டீமின் தலையீடு தாராளமாக இருந்ததாகவும் செய்திகள் கிடைத்தன. ​அந்த வகையில்,​ சமீபத்தில் கோவை காந்​திபுரம் பகுதி​யில் பார் நடத்​தும் கருப்பு​சாமி என்பவரை கரூர் டீம் கமிஷன் கேட்டு மிரட்​டிய​தாகத் தெரி​கிறது.

இது குறித்து தனியார் நாளிதழுக்கு கோவை டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சிலர் கூறியதாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், “கோவை​யில் உள்ள டாஸ்​மாக் பார்களை ஈஸ்வரமூர்த்தி​யின் கரூர் டீம், தன் கட்டுப்​பாட்​டில் வைத்​துள்ளது. ஒவ்வொரு பாரிலும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வரை மாதாமாதம் கட்சிக்காக என்று சொல்லி வசூலிக்​கின்​றனர்.

Karur Team in TASMAC bars viral video

இதனைச் சமாளிக்க முடி​யாமல் பார் உரிமை​யாளர்கள் பயந்து, ஒதுங்கி நிற்​கின்​றனர். கடந்த ஓராண்டாக (செந்தில் பாலாஜி சிறையில் இருந்த காலம்) இந்தக் கெடு​பிடிகள் இல்லாமல் நிம்​ம​தியாக இருந்​தோம். இப்போது திடீரென மீண்​டும் கட்சிப் பணம் கேட்டு மிரட்டு​கின்​றனர். இதனைக் கொடுக்க மறுத்​தால் அதிகாரிகள் உதவி​யுடன் பார்களை பூட்டி சீல் வைத்து, வேறொரு​வருக்கு அதை ஒதுக்​கீடு செய்கின்​றனர்.

இதையும் படிங்க: சிறுமி கர்ப்பமடைந்த விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு… இளைஞருக்கு அறிவித்த தண்டனை!!

அரசுக்குச் செலுத்த வேண்டிய டெண்டர் தொகையை செலுத்​தாமலும் ஏராளமான பார்கள் அனும​தி​ இன்றி கரூர் பார்ட்​டிகளின் ஆதரவுடன் நடத்​தப்​படு​கிறது. அந்த பார்களி​லும் கெடு​பிடி வசூல் செய்​கின்​றனர். ஆளும் கட்சி​யின் ஆதரவு கரூர் டீமிற்கு இருப்​ப​தால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை” எனக் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 52

    0

    0

    Leave a Reply