அருண் விஜயை வைத்து சம்பவம் செய்தாரா பாலா…வணங்கான் திரைவிமர்சனத்தை பாருங்க..!
Author: Selvan10 January 2025, 8:02 pm
அர்ஜுன் விஜய்-பாலா கூட்டணி ரசிகர்ளை கவர்ந்ததா
தமிழ் சினிமாவில் கடந்த பல வருடமாக தோல்விகளை சந்தித்து பெரும் விமர்சனத்துக்கு ஆளான இயக்குனர் பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு அருண் விஜயை வைத்து வணங்கான் படத்தை எடுத்துள்ளார்.இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளதால் படத்தில் பாலா கதையை எப்படி செதுக்கியுள்ளார் என்று பார்க்கலாம்.
இப்படத்தில் வாய் பேச முடியாத நபராக நடித்துள்ள அருண் விஜய் தன்னுடைய ஊருக்குள்ளே நடக்கும் அசம்பாவிதங்களை தட்டிக்கேட்டு அதற்கு காரணமானவர்களை அடித்து துவைத்து போடும் ஆளாக இருக்கிறார்.இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் இவரை வேற எங்கயாவுது வேலைக்கு சேர்த்தால் தான் அமைதியாக இருப்பான் என அந்த ஏரியாவில் உள்ள ஒரு சர்ச் பாதர் உதவியுடன் ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் காவலாளியாக வேலை செய்கிறார்.
அப்போது அங்கே உள்ள இருவரை அடித்து கொலை செய்து விட்டு,பின்பு போலீஸ் ஸ்டேஷனில் சென்று ஆஜராகி விடுகிறார். காவல் துறை அவரிடம் எதற்காக அவர்களை கொலை செஞ்ச என துருவி துருவி கேள்வி கேட்க,அதற்கு அருண் விஜய் என்ன பதில் சொன்னார் என்பதே படத்தின் மீதி கதையாக உள்ளது.
இதையும் படியுங்க: COME BACK கொடுத்தாரா சங்கர்…”கேம் சேஞ்சர்”படத்தின் திரை விமர்சனம் இதோ…!
பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பு அசத்தலாக உள்ளது,மேலும் மாற்றுத்திறனாளியாக வரும் சில காட்சிகளில் அவருடைய நடிப்பு நம்முடைய கண்களை கலங்க வைத்து விடுகிறது.படத்தில் அருண் விஜய்க்கு காதலியாக நடித்துள்ள ரோஷினி,போலீசாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,நீதிபதியாக நடித்திருக்கும் மிஸ்கின் போன்றோர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் நடிப்பை அற்புதமாக காட்டி இருப்பது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
பாலா படம் என்றாலே வன்முறைக்கு பஞ்சம் இருக்காது,அந்த வகையில் இப்படத்திலும் சண்டை காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.படத்தில் ஜி வி பிரகாஷின் பாடல்கள் கதையோடு தொடர்பு படுத்தி வருகிறது.மொத்தத்தில் அருண் விஜய்க்கும் பாலாவுக்கு வணங்கான் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.