இரவில் விஷாலை வீட்டுக்கு எதுக்கு கூப்பிட்ட? சுசித்ராவை விளாசும் பிரபலம்!
Author: Udayachandran RadhaKrishnan10 January 2025, 7:29 pm
அண்மையில் விஷால் குறித்து பேசிய சர்ச்சை பாடகி சுசித்ரா, ஒயின் பாட்டிலுடன் போதையில் விஷால் வீட்டுக்கதவை தட்டியதாகவும், நான் கார்த்திக்குமார் இல்லை என சொன்ன பிறகும், வீட்டிற்குள் வரவா என கேட்டதாகவும், நான் நோ என்று சொல்லிவிட்டேன் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சார்மிளா, சுசித்ரா நல்ல பாடகி, திறமையானவர். ஆனால் ஏன், தனுஷ், வைரமுத்து குறித்து சர்ச்சையாக பேசினார்.
தற்போது விஷால் குறித்து பேசுகிறார் என தெரியவில்லை. அவருக்கு எப்போதும் சர்ச்சையை கிளப்ப வேண்டும் என இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுகிறார்.
தனுஷ், வைரமுத்து பற்றி எனக்கு தெரியாது, ஆனால் விஷால் எனக்கு பழக்கமானவர். அவர் நடிகர் சங்கத்தலைவர். அவரை பற்றி பேச சுசித்ராவுக்கு என்ன அவசியம்? இப்போது அவர் உடல்நிலை பற்றி செய்திகள் வெளியானதால், அவரை பற்றி லைம் லைட்டில் இருக்க ஆசைப்படுகிறார்.
இதையும் படியுங்க: அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு..வாயை கொடுத்து வாங்கி கட்டிய பிக் பாஸ் சௌந்தர்யா!
சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விவாதம் எழும் போது அதை பற்றி சுசித்ரா பேசுவது போல விஷால் பற்றி பேசியுள்ளார்.
ஒரு நண்பர் வீட்டுக்கு போவதற்கு முன் போன் செய்து கேட்டு போவோம். ஆனால் விஷால் போன்ற பிரபலங்கள் வீட்டுக்கு வரும் போது போன் செய்யாமல் எப்படி திடீரென வந்தார்? அதுவும் ஒயின் பாட்டிலோடு, எத்தனையோ நடிகைகள் இருக்கும் போது உன் வீட்டுக்கு வந்தாரா? என சரமாரியாக விமர்சித்துள்ளார் சார்மிளா.