ஆல் ஏரியா நம்ம தான் KING… துபாய் கார் ரேஸில் பட்டையை கிளப்பிய அஜித்…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Author: Selvan
10 January 2025, 8:51 pm

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித் ரேஸிங் டீம்

சினிமாவில் அஜித் நடிப்பதை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் சமீப காலமாக அஜித்தின் ரேஸிங் விடீயோக்கள் மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ajith Kumar Viral Racing Video

அந்த வகையில் அஜித் தன்னுடைய டீமுடன் கார் ரேஸில் இறங்கி,அதற்கான முழு பயிற்சியில் ஈடுபட்டு,இன்று பந்தயத்தில் சீறி பாய்ந்துள்ளார். இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கிய கார் ரேஸில் அஜித் சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இதையும் படியுங்க: துபாய் ரேஸில் பல திக் திக் சவால்களை எதிர்கொள்ள போகும் அஜித் குழுவினர்… 24 மணி நேரம் எப்படிங்க..!

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித்தின் ரேஸிங் கார் பயங்கர விபத்துக்குள்ளானது,அதிலிருந்து எந்த வித காயமுமின்றி மீண்டு வந்த அஜித் இன்றைக்கு நடந்த போட்டியில் தன்னுடைய அணியுடன் மின்னல் வேகத்தில் சென்று 7-வது இடத்தை பிடித்து,அடுத்த சுற்றுக்கு அஜித் ரேஸிங் டீம் தகுதி ஆகியுள்ளது.

இந்த மெகா வெற்றியை உலகம் முழுவதும் இருக்க கூடிய அஜித் ரசிகர்கள் பாட்டாசுகளை போட்டு மேள தாளங்களை வாசித்து சந்தோச வெள்ளத்தில் ஆடி பாடி வருகின்றனர்.

மேலும் பந்தயம் முடிந்த பிறகு அஜித் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது,அதில் அவர் சிறிது காலம் சினிமாவிற்கு ஓய்வு கொடுக்க போகிறேன் என தெரிவித்திருந்தார்.18 வயதில் தொடங்கிய என்னுடைய ரேஸ்,அதன் பின்பு சில பல காரணங்களால் முழுமையாக தொடர முடியவில்லை,ஆனால் இப்போது ஒரு முடிவோடு தான் வந்துள்ளேன் என தெரிவித்திருந்தார்.

  • Atlee’s Bollywood Production Updates ஒற்றைக்காலில் அடம் பிடிக்கும் அட்லீ…மீண்டும் பாலிவுட் படமா..!
  • Views: - 17

    0

    0

    Leave a Reply