ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திமுக.. யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

Author: Hariharasudhan
11 January 2025, 9:49 am

ஈரோடு கிழக்கு தொகுதியில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், சமீபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த தொகுதி காலியானதாக தலைமைச் செயலகத்தால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனை செல்வப்பெருந்தகையும் அறிவித்துள்ளார். இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி வேட்பாளராக திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த வி.சி.சந்திரகுமார்? வி.சி.சந்திரகுமார், ஈரோட்டைச் சேர்ந்தவர். கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து சந்திரகுமார், பின்னர் தேமுதிக சார்பில் 2006 சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

Erode East By Election 2025 DMK Candidate

இதனையடுத்து, 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 10 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவ்வாறு எம்எல்ஏவாக மட்டுமின்றி, கட்சிக் கொறடாவாகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் சந்திரகுமார் இருந்தார்.

முக்கியமாக, சட்டப்பேரவையில் கூட விஜயகாந்த் இல்லாத நிலையில், சந்திரகுமார் தான் கட்சியை நடத்தி வந்தார். இருப்பினும், 2016ஆம் ஆண்டு அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறி மக்கள் நல கூட்டணியுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த். அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என வி.சி.சந்திரகுமார் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!

ஆனால், அவரது கோரிக்கை ஏற்கபடாத நிலையில், சந்திரகுமார், பார்த்தீபன் போன்றோர் பிரிந்து வந்து ‘மக்கள் தேமுதிக’ என்ற அமைப்பை ஆரம்பித்தனர். அவர்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க, சந்திரகுமார் உள்ளிட்ட 3 பேருக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஆனால் மூவருமே தோல்வியைத் தழுவினர். அதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு ஜுன் 16ஆம் தேதி, சென்னை, கோபாலபுரத்தில் அப்போது திமுக தலைவராக இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினர். மேலும், மக்கள் தேமுதிக அமைப்பை திமுகவுடன் இணைப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து, தற்போது திமுக கொள்கை இணை பரப்புச் செயலாளராக வி.சி.சந்திரகுமார் செயல்பட்டு வருகிறார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!