‘இதனால்’ தான் நான் காமெடியன் ஆனேன்.. திடீரென மாறிய வடிவேலு முகம்!

Author: Hariharasudhan
11 January 2025, 11:57 am

மாமன்னன் படம் போன்று பல கஷ்டங்களை அனுபவித்தவன் நான் என வடிவேலு உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

மதுரை: மதுரை மாவட்டம், பீபீ குளம் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில், வருமான வரித்துறை அலுவலகத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டு, பொங்கல் விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்.

பின்னர், இந்த நிகழ்வில் பேசிய வடிவேலு, “எனக்கு ‘நாராயணன்’ என எனது மாமா பெயர் வைத்தார். ஆனால், என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போனதால் எனது அம்மா ’வடிவேலு’ என பெயர் வைத்தார். தற்போது இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி.

ஆனால், மாமன்னன் படத்தைப் போல கஷ்டத்தை அனுபவித்தவன் நான். அதனாலேயே நகைச்சுவை நடிகனாக மாறினேன்” எனக் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வடிவேலு, “4 நாட்களுக்கு முன்பே எனக்கு பொங்கல் வந்தது போல் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்கச் செல்வேன்.

Vadivelu about his early life

மாடு பிடிக்கும் ஆள் நான் கிடையாது. தற்போது ஜல்லிக்கட்டு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. பொங்கலுக்குப் பிறகு அடுத்த படத்திற்குத் தயாராகுவேன். சுந்தர்.சியின் கேங்கர்ஸ் படத்திலும், ஃபகத் ஃபாசிலோடு சேர்ந்து மாரிசன் படமும் நடிக்க தயாராக இருக்கிறது.

இதையும் படிங்க: பெரியாரின் வார்த்தையை உச்சரித்த நயன்தாரா : யாரை விமர்சித்தார்? பரபரப்பு பேச்சு!

மேலும், பிரபுதேவாவும், நானும் சேர்ந்து ஒரு படம் நடிக்கிறோம். இருக்கிறவர்களிடம் வரியை போட்டுத் தள்ளுங்கள். ஏழை, எளியவர்களுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என மேடையில் கோரிக்கையாகச் சொன்னேன், அது ஜாலியான ஒரு மேட்டர் தான்” எனத் தெரிவித்தார்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!