விரைவில் திரிஷா அமைச்சராகப் போகிறார்… மீண்டும் புயலை கிளப்பிய பிரபல நடிகர்!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2025, 6:00 pm
திரிஷா விரைவில் அமைச்சராகப் போகிறார் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் திரிஷாவை பெட்ரூம் காட்சியுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பியது. அவருக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.
இதையும் படியுங்க: கணவருடன் உல்லாசமாக இருந்த பெண் கொலை : பிரபல ரவுடியின் மனைவிக்கு ‘பலே’ தண்டனை!
இந்த நிலையில் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகானிடம் பல்வேறு கேள்விகளை நிருபர்கள் எழுப்பினர்.
அப்போது நிருபர் ஒருவர், நீங்கள் திரிஷா பற்றி பேசும் போது என கேள்வி எழுப்பி யபோது அப்போது குறுக்கிட்ட மன்சூர் அலிகான், நா எங்க பேசுனேன், கட் பண்ணி வைச்சு நாசம் பண்யா, அதை மறக்க முடியல, கொஞ்சம் அந்த பக்கம் தள்ளிப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ளல அவங்க அமைச்சர் ஆகிடுவாங்க..அங்க போ என கூறினார்.
மன்சூர் அலிகான் மறுபடியும் தேவையில்லாத பேச்சை பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதனால் அவர் இப்படி கூறினார். எதாவது உள்நோக்கமா என்பது தெரியவில்லை.