பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் ஊதியம்.. இதென்னங்க புதுசா இருக்கு?
Author: Hariharasudhan11 January 2025, 6:46 pm
பீகாரில், பெண்களைக் கர்ப்பமாக்கினால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாட்னா: பீகாரின், நவாடா மாவட்டத்தில் உள்ள கஹுரா என்ற கிராமத்தில் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று பேரும் முகநூல் பக்கத்தில், அகில இந்திய பிரக்னண்ட் வேலை வாய்ப்பு என்ற பெயரில் விளம்பரம் செய்துள்ளனர். இதனையடுத்து, இந்த விளம்பரத்தைப் பார்த்து போன் செய்யும் நபர்களிடம் இந்த வேலைக்கு தங்களிடம் பதிவு செய்துகொள்ளுங்கள் எனக் கூறுகின்றனர்.
இதனை நம்புபவர்களுக்கு, அவர்களிடம் இருந்து ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் செல்பி எடுத்து அனுப்பி வைக்கும்படி கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பதிவுக்கட்டணம் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்குகின்றனர். இவ்வாறு தங்களது மோசடி வலையில் சிக்கும் நபர்களிடம், குழந்தை இல்லாத பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும், கர்ப்பமாக்கத் தவறினாலும் ரூ.50 ஆயிரத்திலிருந்து 5 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது குறித்து துணை ஆணையர் இம்ரான் பர்வேஸ் கூறுகையில், “All India Pregnant Job Service மற்றும் பிளேபாய் சேவைகளை நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்தக் கும்பல் தங்களிடம் சிக்குபவர்களிடம் ஹோட்டலில் அறை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு நம்பத்தகுந்த காரணங்களைச் சொல்லி பணம் வசூலித்து வந்தனர்.
அது மட்டுமல்லாமல், அவர்களை மிரட்டியும் பணம் சம்பாதித்துள்ளனர். இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் பிரின்ஸ் ராஜ், போலா குமார், ராகுல் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விரைவில் திரிஷா அமைச்சராகப் போகிறார்… மீண்டும் புயலை கிளப்பிய பிரபல நடிகர்!
மேலும், அவர்களிடம் இருது மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமே வாடிக்கையாளர்களுடன் சாட்டிங் செய்தது, பணப் பரிவர்த்தனை போன்ற விவரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.