ரஜினியின் தரமான சம்பவம் LOADING …தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ…!
Author: Selvan11 January 2025, 6:39 pm
ஜெயிலர் 2-க்கு தயாரான ரஜினி வெளிவந்த மாஸ் அப்டேட்
தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் தன்னுடைய 74 வயதிலும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி தன்னுடைய மாஸான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: திடீரென காதலியை கரம் பிடித்த இளம் பாடகர்…ஓடி சென்று வாழ்த்திய இளையராஜா…!
தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால்,ரஜினியின் அடுத்த பட குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு அமோக வரவேற்பை பெற்று தந்தது.அதுமட்டுமல்லால் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் X-தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஒரு மிரட்டலான வீடீயோவை வெளியிட்டுள்ளது.
Sun Pictures' next Super Saga 🔥
— Sun Pictures (@sunpictures) January 11, 2025
Gear up for the explosive announcement💥
Stay Tuned!#SunPictures pic.twitter.com/BFYfwBcQt7
அதில் சீக்கிரம் ரஜினியை வைத்து ஒரு அறிவிப்பு வரும் என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்துள்ளது.ஏற்கனவே ஜெயிலர் முதல் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து பெரும் வெற்றியை ருசித்ததால்,தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர்2-வை செதுக்க ரெடியாக உள்ளது.இதனால் விரைவில் ஜெயிலர்-2 படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.