யாருமே எதிர்பார்க்காத எலிமினேஷன்… பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளிப்பு : கடும் எதிர்ப்பு!
Author: Udayachandran RadhaKrishnan11 January 2025, 6:30 pm
இந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசனி 8 நிகழ்ச்சி 97 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போது டாப் 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், பழைய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து போட்டியை கொடுத்தனர்.
இதையும் படியுங்க: விரைவில் திரிஷா அமைச்சராகப் போகிறார்… மீண்டும் புயலை கிளப்பிய பிரபல நடிகர்!
இந்த நிலையில் இந்தவாரம் யார் எவிக்ஷன் ஆக போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன் உள்ளது.
முதல் ஆளாக அருண் வெளியேறிய நிலையில், இரண்டாவதாக தீபக் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
Unfair என ரசிகர்கள் கருதுகின்றனர். அருண், தீபக் வெளியேறியுள்ளதால் முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, ரயான் இறுதிக்கட்டத்துக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.