முதல்முறையாக களத்தில்.. பரந்தூருக்கு பறக்கும் விஜய்.. அனுமதி கொடுக்குமா காவல்துறை?
Author: Udayachandran RadhaKrishnan11 January 2025, 7:58 pm
பரந்தூர் மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ள நிலையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக உள்ளது. இதற்காக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்க: பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் ஊதியம்.. இதென்னங்க புதுசா இருக்கு?
900வது நாளாக போராட்டம் செய்தும் மத்திய , மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் மக்கள் இதில் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய், முதன்முறையாக களத்தில் இறங்க உள்ளார். அதவாது ஜனவரி 3வது வாரத்தில் பரந்தூர் மக்களை சந்திக்க உள்ளார்
இதற்காக காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக கடிதம் அளித்துள்ளது. ஜனவரி 19 அல்லது 20ஆம் தேதிகளில் அனுமதி கேட்டு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சி அறிவித்த பின் முதல்முறையாக களத்தில் விஜய் இறங்க உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. அதே சமயம் இவர் களத்தில் இறங்க காவல்துறை அனுமதி கொடுக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.