நீங்க அவரை கவனிச்சீங்களா…துபாய் கார் ரேஸில் நடனம் ஆடிய அஜித் பட இயக்குனர்…!

Author: Selvan
11 January 2025, 8:50 pm

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் வைரல் வீடியோ

கடந்த சில நாட்களாக அஜித்தின் துபாய் 24H-கார் ரேஸ் சம்மந்தமான தகவல்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

அந்த வகையில் அஜித் தன்னுடைய கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் அஜித் அதிர்ஷ்டவசமாக எந்த வித காயமின்றி உயிர் தப்பினார்.

aathik ravichandran viral video

இந்நிலையில் இன்று நடந்த போட்டியில் அஜித் அவரது உடல்நிலை கருதி ரேஸில் ஈடுபடவில்லை என்ற தகவல் வந்தது,இருந்தாலும் தொடர்ந்து அணி தலைவராக செயல்படுவார் என்று கூறப்பட்டது.

இன்று அஜித் களத்திற்கு வந்ததில் இருந்து அங்கு கூடி இருந்த ரசிகர்கள் அவரை ஆதரித்து வாழ்த்துக்களை கூறி வந்தனர்.அப்போது அங்கிருந்த தொகுப்பாளர் அஜித்திடம் பேட்டி எடுக்கும் போது,அஜித் நான் எப்போதும் ரசிகர்களை மதிக்கிறேன்,அங்கிருந்த ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து UNCONDITIONAL LOVE என்று சொன்னார்.

இதையும் படியுங்க: சோசியல் மீடியாவை அலறவிட்ட”இருங்க பாய்”…குரலுக்கு சொந்தக்காரர் இவர் தானா…!

அதுமட்டுமல்லாமல் அஜித்துக்கு ஆதரவாக அவரது மேலாளர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அவர் கூட இருந்து,அவருக்கு சப்போர்ட் பண்ணி வருகின்றனர்.இந்த சூழலில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் தனது நண்பர்களோடு உற்சாகமாக நடனம் ஆடி வைப் செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

மேலும் அஜித் தனது டீமுடன் உற்சாகமாக வெற்றி கொண்டாட்டத்தை ஈடுபட்ட வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை இப்படி பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது என கூறி வருகின்றனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!
  • Leave a Reply