தளபதி69 கதையை போட்டுடைத்த விடிவி கணேஷ்…சட்டென மைக்கை பிடுங்கிய பிரபல இயக்குனர்..!

Author: Selvan
12 January 2025, 3:49 pm

அப்போ தெலுங்கு பட ரீமேக் தானா

நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளதால் சினிமாவில் தன்னுடைய கடைசி படமான தளபதி-69 படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் ஷூட்டிங் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் படத்தின் கதை என்னவா இருக்கும் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஹெச் வினோத் தீர அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியையும் வலிமை படத்தில் அஜித்தையும் போலீசாக நடிக்க வைத்து வெற்றி கண்டதால்,இப்படத்திலும் விஜய்க்கு போலீஸ் அதிகாரி ரோல் இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Bhagavanth Kesari remake by Vijay

இப்படி தளபதி69 படத்தை பற்றி நாளுக்கு நாள் சுவாரசியமான தகவல் வெளிவரும் நிலையில் தற்போது தெலுங்கு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடிவி கணேஷ் நன் இதை சொல்லியே ஆக வேண்டும் என அவர் பேச ஆரம்பித்து,நடிகர் விஜய் அணில் ரவிபுடியின் பகவத் கேசரி படத்தை 5 முறை பார்த்தார்,மேலும் இந்த படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது,இதனால் என்னுடைய 69 வது படமாக இதை ரீமேக் செய்து இயக்க முடியுமா எனக் கேட்டார் என்று சொல்லிக்கொண்டிருப்பார்.

அப்போது,பக்கத்தில் இருந்த இயக்குனர் அணில் ரவிபுடி சுதாரித்துக்கொண்டு,அவரிடம் இருந்து மைக்கை பிடிங்கி என் கதை வேறு,அவர் நடிக்கின்ற படத்தின் கதை வேறு.அதனால் அதைபற்றி நாம இங்கு பேச வேண்டாம்,நடிகர் விஜய் மிகவும் கனிவான நபர்,அவரை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என அந்த நிகழ்ச்சியில் பேசியிருப்பார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Ajith Kumar Dubai car race victory அரங்கமே அதிர…ஒட்டுமொத்த உலகமே திரும்பி பார்க்க…மகனுடன் மேடையை பகிர்ந்த அஜித்..!
  • Leave a Reply