அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!
Author: Udayachandran RadhaKrishnan13 January 2025, 11:26 am
சினிமாவில் உள்ள பிரபலங்கள் அரசியலுக்குள் நுழைவதும் காலம் காலமாக நடந்து வருவது வாடிக்கைதான். அப்படி எத்தனையோ பேர் சினிமாவில் நுழைந்து அரசியலிலும் வென்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இணைய உள்ளார் பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார். குறுகிய காலத்தில் வில்லியாக, கதாநாயகியாக பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் வரலட்சுமி.
தற்போது திருமணமாகி செட்டிலான நிலையில், 2013ஆம் ஆண்டு வெளியாக இருந்த மதகஜ ராஜா 12 வருடத்திற்கு பின் தற்போது வெளியாக உள்ளது.
இதையும் படியுங்க: ‘நான் பாத்துக்கிறேன்’.. விஜய் மகனுக்கு அஜித் சொன்ன ரகசியம்!
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற வரலட்சுமியிடம், பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அரசியலுக்கு வருவீர்களா என கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய வரலட்சுமி, நிச்சயம் வருவேன் என கூறினார்
மேலும், படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும், என்னுடைய இன்ஸ்பிரேஷன் ஜெயலலிதா மேடம் தான் என்றும், உண்டையில் அவர் ஒரு அயர்ன் லேடிதான் என கூறினார்.