தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!
Author: Selvan13 January 2025, 1:02 pm
மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி
தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி இயக்குனர்,தயாரிப்பாளர்,பாடகர் என பல வித திறமைகளை கையில் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.இவர் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன்.அதிலும் குறிப்பாக தனுஷை வைத்து இவர் இயக்கிய பொல்லாதவன்,ஆடுகளம்,அசுரன்,வட சென்னை என நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இதையும் படியுங்க: அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!
இந்நிலையில் அடுத்து தனுஷை வைத்து வெற்றிமாறன் எப்போது படம் எடுக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் 5-வது முறையாக மீண்டும் வெற்றிமாறன் தனுசுடன் இணையவுள்ளார்.இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மற்றுமொரு
— RS Infotainment (@rsinfotainment) January 13, 2025
தலைசிறந்த படைப்பை தந்த
இயக்குநர் திரு.வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு நன்றி #விடுதலைபாகம்2-ன் வெற்றிகரமான 25 நாள்
ரசிகர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள்,விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரை உலக நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.… pic.twitter.com/hD3Gnhh2ap
வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை முடித்த பிறகு இப்படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது