கணவருக்கு செருப்படி.. மனைவி குத்திக் கொலை.. சென்னையில் பயங்கரம்!
Author: Hariharasudhan13 January 2025, 12:15 pm
சென்னையில், கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை குத்திக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை: சென்னையின் திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையில் வசித்து வருபவர் மணிகண்டன் (42). இவரது மனைவி ஜோதி (27). இவர்களுக்கு ஜெகதீஷ், தனுஷ், ஹரிஷ் என மூன்று மகன்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்த நிலையில், ஜோதி மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதன்படி, இவர்கள் 4 பேரூம் மேடவாக்கம், புதுநகர், நான்காவது குறுக்குத்தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் ஜோதி வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் மணிகண்டனின் அக்கா துளசி என்பவரின் மருமகன் கிரிஷ் என்ற கிருஷ்ணமூர்த்தி (38) என்பவரும் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்திக்கும், ஜோதிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், இந்த விஷயம் மணிகண்டனுக்கு தெரிய வரவே, அவர் மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், ஜோதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கிருஷ்ணமூர்த்தியுடன் ஜோதி குடும்பம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை ஜோதியை தொடர்பு கொண்ட மணிகண்டன், சபரிமலை பிரசாதத்தை குழந்தைக்குத் தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் பள்ளிக்கரணைக்கு ஜோதி வந்துள்ளார்.
அப்போது, மணிகண்டன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, ஆத்திரத்தில் ஜோதி கணவரை செருப்பால் தாக்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனால் மிகுந்த கோபத்தில் இருந்த ஜோதி, மேடவாக்கம் பகுதிக்கு நேற்று 08:40 மணிக்கு கிருஷ்ணமூர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!
அங்கு இருதரப்பு வாக்குவாதம் ஏற்படவே, மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோதியை சரமாரியாக குத்தி உள்ளார். இதனைத் தடுக்க வந்த கிருஷ்ணமூர்த்திக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. பின்னர், இருவரையும் மீட்ட பொதுமக்கள், அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ஜோதி உயிரிழந்தார். மேலும், கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், பொதுமக்களால் பிடிக்கப்பட்ட மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.