கபில் தேவ் மீது துப்பாக்கிச்சூடு முயற்சி.. தோனி யார் தெரியுமா?.. யுவராஜ் சிங் தந்தை பகீர் தகவல்!

Author: Hariharasudhan
13 January 2025, 1:00 pm

தன்னை நீக்கிய அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில் தேவை சுட முயற்சித்தேன் என யுவராஜ் சிங்கின் தந்தை கூறியுள்ளார்.

மும்பை: இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில், “கபில் தேவ், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தபோது காரணமின்றி என்னை அணியில் இருந்து நீக்கினார்.

எனவே, கோபத்தில் கபில்தேவைச் சுடுவதற்கு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்போது, கபில்தேவ் அவரது தாயாருடன் வெளியே வந்தார். கபில்தேவ்விடம் ‘உங்கள் அருகில் பக்திமிக்க தாயார் இருப்பதால் துப்பாக்கியால் சுடவில்லை’ என்று சொல்லி அங்கிருந்து திரும்பினேன்.

என்னை நிராகரித்ததால், மீண்டும் கிரிக்கெட் விளையாடக்கூடாது என கோபம் அடைந்தேன். எனவே, எனது மகன் யுவராஜ் சிங்கை கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுத்த முடிவு செய்தேன்” எனக் கூறியுள்ளார். யோக்ராஜ் சிங்கின் இந்த கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Yograj Singh about Kapil Dev Shooting try and MS Dhoni

அதேநேரம், “தோனியை மிகவும் உற்சாகமான மோட்டிவேட் செய்யக்கூடிய கேப்டனாக நான் பார்க்கிறேன். அவரால், மற்ற வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்களுக்குச் சொல்ல முடியும். அதுமட்டுமல்லாமல் தோனியிடம் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர் விக்கெட்டை படித்து பந்துவீச்சாளர்களுக்கு எங்கு பந்து வீச வேண்டும் என்று சொல்ல முடியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்த வீட்டுக்கு வந்து நீ என்ன கிழிச்ச? சௌந்தர்யா – சுனிதா குடுமிப்பிடி சண்டை : வைரலாகும் வீடியோ!!

முன்னதாக, “என்னுடைய மகன் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்து விட்டதற்காக தோனியை எப்போதும் நான் மன்னிக்க மாட்டேன்” என்பது உள்பட தோனிக்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்த யோக்ராஜ் சிங், தற்போது தோனியின் நிறைகளைக் கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!