’ஆணாதிக்க ஆழ்மன வக்கிரம்’.. பாலாவை கடுமையாக சாடிய பிரபல இயக்குநர்!
Author: Hariharasudhan13 January 2025, 2:28 pm
பாலாவின் வணங்கான் திரைப்படம் குறித்து இயக்குநர் லெனின் பாரதி வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: இது தொடர்பாக இயக்குநர் லெனின் பாரதி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க மற்றும் ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி ஷெட்டி, சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோரது நடிப்பில், கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் வெளியீடாக வெளியான படம், ‘வணங்கான்’. இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
மேலும், பாலா தனது பழைய பாணியிலான கதையில், அருண் விஜயின் நடிப்பில் மிரட்ட வைத்திருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம், அருண் விஜய்க்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்ததாகவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பார்ட்டியில் நடிகையிடம் எல்லை மீறிய 64 வயது நடிகர்.. வெளியான வீடியோ !!
அதேநேரம், ஆண்டனி, காயத்ரி கிருஷ்ண நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மேற்குதொடர்ச்சிமலை. இளையராஜா இசை அமைத்து, விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி. இந்த நிலையில், லெனின் பாரதி, இயக்குநர் பாலா குறித்தான பதிவு வைரலாகி வருகிறது.