பிரபல நடிகருடன் டேட்டிங்.. இரண்டாவது திருமணம் செய்யும் சானியா மிர்சா!
Author: Udayachandran RadhaKrishnan15 January 2025, 11:09 am
பிரபல நடிகருடன் டேட்டிங்கில் சானியா மிர்சா? இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்!
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியர் மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். 2010ல் திருமணம் செய்த ஜோடி, 2023ல் விவாகரத்து செய்தனர். மகனுடன் சானியர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
இதனிடையே சோயப் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சனா ஜாவித்தை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.
தற்போது சானியா 2வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பிரபல தெலுங்கு நடிகருடன் டேட்டிங் சென்று வருவதாகவும், அவரை திருமணம் செய்ய போவதாகவும் கூறப்படுகிறது.
அந்த நடிகர் யார் என்ற தகவல் வெளியாகவில்லை, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்.