வாடி வாசலை திறந்து விட்ட எஸ்.தாணு…சீறிப்பாயுமா வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி…!

Author: Selvan
15 January 2025, 2:00 pm

வாடி வாசல் படத்தின் புது அப்டேட் வெளியீடு

நீண்ட நாட்களாக வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில்,தற்போது படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Vaadivaasal shooting announcement

பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை-2 திரைப்படம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில்,அடுத்து வெற்றிமாறன் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதையும் படியுங்க: வெளுத்து வாங்கும் மதகஜராஜா…. காணாமல் போன பிரம்மாண்ட இயக்குனர்…!

அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் சிலர் வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யா விலகிவிட்டார் என்ற தகவலும் கசிந்தது.இந்த நிலையில் விடுதலை-2 ரிலீசிற்கு பிறகு தன்னுடைய அடுத்த படம் வாடிவாசல் தான் என்று பேட்டி அளித்தார்.தயாரிப்பாளர் தாணுவும் படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் எல்லாம் முடிந்து விட்டது விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் தற்போது பொங்கல் பண்டிகையின் சிறப்பாக ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் தாணு,தன்னுடைய X-தளத்தில் வெற்றிமாறன் மற்றும் சூர்யாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து அதில் “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது”என்று பதிவிட்டிருந்தார்.

இதன்மூலம் விரைவில் படத்தின் ஷூட்டிங் வேலைகள் மும்மரமாக நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது.மேலும் வெற்றிமாறன் அடுத்ததாக மீண்டும் தனுசுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.இதன்மூலம் வெற்றிமாறன் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாக படுத்த உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Shankar about Game Changer Reviews கேம் சேஞ்சர் ஒருவேளை.. ஷங்கர் உடைத்த சீக்ரெட்.. கொதிப்பில் ரசிகர்கள்!
  • Leave a Reply