ரசிகர்ளுக்கு பொங்கல் பரிசு கொடுத்த லைக்கா…விடாமுயற்சி படத்தின் OTT-உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்…

Author: Selvan
15 January 2025, 2:45 pm

OTT-குறிச்சாச்சு அப்போ தியேட்டர் ரிலீஸ்..!

இந்த வருடம் பொங்கல் பண்டிகையை அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தோடு கொண்டாடலாம் என ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில்,படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போட்டது.

இதையும் படியுங்க: அஜித்திடம் அத்துமீறிய ரசிகர்.. கடுப்பான AK.. வைரலாகும் வீடியோ!!

இதனால் படம் எப்போது வரும் என ரசிகர்கள் குழம்பி இருந்த சூழலில்,அஜித் துபாய் 24H கார் ரேஸில் கலந்து கொண்டு பேட்டியளித்த போது,விடாமுயற்சி ஜனவரி மாதம் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் படம் ஜனவரி 23 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில்,தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தன்னுடைய X-தளத்தில் விடாமுயற்சி படத்தின் புது அப்டேட்டை வெளியீட்டு,ரசிகரக்ளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

அதாவது விடாமுயற்சி படம் தமிழ்,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபல நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.இதனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் விரைவில் வெளியாகி,ரசிகர்களை சந்தோசப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Director Ameer connection to drug case இயக்குனர் ‘அமீர்’ சிக்குவாரா…ஜாபர் ஆதிக் போதைப் பொருள் வழக்கில் அதிரடி திருப்பம்.!