கோவை சத்யன் திடீர் விலகல்… என்ன காரணம்? பரபரக்கும் அதிமுக!!
Author: Udayachandran RadhaKrishnan15 January 2025, 3:47 pm
அதிமுகவின் ஐடி விங் தலைவராக இருந்த கோவை லோக்சபா தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் சமூகவலைதளங்களில் செயலில் குறைவாக இருப்பதாகவும், கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவிப்புகளை கூடப் பகிர்வதில் பின்தங்குவதாகவும் அதிமுக தலைமைக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து, அவரை பதவியிலிருந்து விடுவித்து, கோவை சத்யனை புதிய தலைவராக நியமித்தார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படியுங்க: வீட்டுக்குள் திடீரென நுழைந்த கும்பல்.. பெண்ணையும் விட்டு வைக்கவில்லை.. சென்னையில் கொடூரம்!
கோவை சத்யன் பொறுப்பேற்ற பின்னர், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ஆளும் அரசின் மீதான விமர்சனங்களை கையிலெடுத்து, பொதுமக்கள் மத்தியில் அதனை கொண்டு சென்றார்.
இதனால் அதிமுகவினரிடையே “யார் இந்த கோவை சத்யன்?” என்ற ஆர்வம் எழுந்தது.
ஆனால், தற்போது கோவை சத்யன் சில மாதங்களுக்கு சமூக வலைதளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
இது அதிமுக வட்டாரத்தில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறியிருப்பதாவது: “விடை பெறுகிறேன். ட்விட்டர், இன்ஸ்டா, முகநூல் மற்றும் திரெட் சமூக வலைதளங்களில் இருந்து சில மாதங்கள் விலக முடிவு செய்துள்ளேன். மீண்டும் சந்திக்கும்வரை.” இவ்வாறு கூறியுள்ளார்.