காதலியே சித்தியாக வந்த அந்த நொடி.. அதிர்ந்து போன மகன்!

Author: Hariharasudhan
15 January 2025, 3:28 pm

மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் மகனுக்கு பார்த்த பெண்ணைக் காதலித்து ஓடிப்போன தந்தையின் செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மும்பை: மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் சிட்கோ பகுதியில் இளைஞர் ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அந்த இளைஞர் திருமண வயதை எட்டிய நிலையில், அவரது தந்தை அவருக்கு வரன் பார்த்து வந்துள்ளார். அதில், ஒரு பெண்ணை அவரது மகனுக்கு பிடித்துப்போனதால், நிச்சயதார்த்தம் முடிந்து, திருமண வேலைகளைத் தீவிரமாக செய்து வந்துள்ளனர்.

அப்போது, மகனுக்கு பார்த்த பெண் மீது தந்தையும் காதல் வயப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல், அந்தப் பெண்ணுக்கும் தனது வருங்கால மாமனார் மீது ஆசை வந்துள்ளது. இதனால், இருவரும் ஊரைவிட்டு ஓடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால், தனக்கு மனைவியாக வேண்டிய பெண், சித்தியாக வந்த கோலத்தைக் கண்டு அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Father in law loves bride

இதனையடுத்து, இதனை விட்டால் வேறு பெண்ணா, இல்லை என அவரது உறவினர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், தந்தை மற்றும் வருங்கால மனைவி செய்த துரோகத்தால் வாழ்க்கையை வெறுத்த அந்த இளைஞர், இனி திருமணம் செய்து கொள்ள மாட்டேன், யாருடனும் சேர மாட்டேன் என சாலையோரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

இதையும் படிங்க: கவுன்சிலிங் என்ற பெயரில் 50 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய ‘டாக்டர்’!

முன்னதாக, இதே போன்று சீனாவில் தனது மகன் காதலித்து வந்த பெண்ணை, சீன வங்கியின் முன்னாள் தலைவர் லியு லியாங்கே, விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்துக் கவர்ந்து திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்